சென்னையில் 700 மில்லியன் ஈரோ முதலீடு செய்யும் மெர்சிடிஸ்-பென்ஸ்

தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புனேவில் ஒரு உற்பத்திப் பிரிவைக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் 2வது இந்திய நகரமாக சென்னைக்கு வருகிறது பென்ஸ்.
இருப்பினும் இந்த உற்பத்திப் பிரிவு எப்போது தொடங்கப்படும், எப்போது பணிகள் தொடங்கும் என்பது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் 4000 கார்களை தயாரித்தது மெர்சிடிஸ் பென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய விரிவாக்கம் குறித்து அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைமை செயலதிகாரி வில்பிரட் ஆல்பர் கூறுகையில், இந்த ஆண்டின் முதல் பாதி சற்று சிரமமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை 1500 கார்களை விற்றுள்ளோம். ஆனால் 2வது பாதி சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளோம்.
நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளன. வாடிக்கையாளர்களும் கார் லோன்களுக்காக வங்கிகளை நாட ஆரம்பித்துள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications








