25 ஆண்டுகளில் 81 லட்சம் வாகனங்களை விற்றது மாருதி

இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி நிறுவனம் 1983ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தனது உற்பத்தியைத் தொடங்கியது. கர்கானில் மாருதி நிறுவனத்தின் முதல் உற்பத்திப் பிரிவு அந்த ஆண்டில் 800 கார்களைத் தயாரித்து விற்பனைக்கு விட்டது.
முதல் காராக மாருதி 800 வெளி வந்தது. அன்று முதல் இதுவரை மாருதி நிறுவனம் 81 லட்சத்து 5 ஆயிரத்து 228 கார்களை விற்றுள்ளது.
மாருதி தயாரிப்புகளில் மாருதி 800 மட்டும் 27 லட்சம் விற்றுள்ளது. இதில் 25 லட்சம் கார்கள் உள்ளூர் சந்தையிலும், மற்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டவையாகும்.


Click it and Unblock the Notifications








