800 டூ 7000... முன்னேறும் பியட்!

கடந்த ஆண்டு பாலியோ ரகக் கார்களை மிகக் குறைந்த அளவுதான் ஏற்றுமதி செய்தது பியட் இந்தியா நிறுவனம். அந்த அளவு குறைந்த தேவை காணப்பட்டது.
ஆனால் இப்போது பியட் தயாரித்துள்ள லீனியா ரகக் கார்களுக்கு கணிசமான ஆர்கள் வரத் துவங்கிள்ளதாம். இதனால் 7000 கார்களை இப்போது அனுப்பத் தயாராகிறது. சார்க் நாடுகளான பூடான், நேபால், இலங்கை, வங்கதேசம் போன்றவற்றுக்கு இந்த கார்கள் அனுப்பப்படும் என பியட் இந்தியா நிறுவனத்தின் ராஜீவ் கபூர் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு 90 லீனியா கார்களை முதல் கட்டமாக அனுப்பி வைத்துள்ளது பியட் இந்தியா.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் - இத்தாலியின் பியட் குழும கூட்டு நிறுவனமான பியட் இந்தியா நிறுவனம், இந்த ஆண்டு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது. பூனாவில் இதற்கென மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு உற்பத்தி நடக்கிறது.
லீனியா, பாலியோ ஸ்டைல் மற்றும் கிராண்ட் பன்டோ ரகக் கார்கள் இங்கே தயாராகின்றன.


Click it and Unblock the Notifications








