இனி சென்னை வழியே தான் போர்ட் கார்கள் ஏற்றுமதி!

மேலும் 2010க்குள் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த வேகமாகத் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளது.
மற்ற துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்வதை விட சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்புவது மலிவாக இருப்பதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில்தான் சென்னை துறைமுகத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு 170 கார்களை அனுப்பியது ஃபோர்டு.
ஆனாலும், சென்னை துறைமுகத்திலிருந்து போர்டு தொழிற்சாலை அமைந்துள்ள தூரம் அதிகமாக உள்ளதால், எளிதில் கொண்டு செல்வதற்கேற்ற வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது போர்டு நிர்வாகம்.
அனைத்து நடைமுறைகளையும் இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு முதல் தங்களின் ஏற்றுமதிகள் முழுவதையும் சென்னை துறைமுகம் வழியாகவே மேற்கொள்ளப் போவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
ரயில்வேயையும் இதற்கு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள பேச்சுவார்த்தைகளைத் துவங்கியுள்ளது.
சிறிய கார்கள் 2010-ல்!
இந்திய கார் சந்தையில் இன்றும் 70 சதவிகிதம் சிறிய ரக கார்களே ஆக்கிரமித்துள்ளன. எனவே சிறிய ரக கார்கள் தயாரிப்பில் மும்முரம் காட்டுகிறது ஃபோர்டு. அடுத்த ஆண்டு முதல் சிறிய ரக கார்களை விற்பனைக்குக் கொண்டுவரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போர்டு இந்தியா நிர்வாக இயக்குநர் மைக்கேல் போனெஹம் தெரிவித்தார்.
மேலும் ஆசிய அளவில் இந்தியாதான் ஃபோர்டு நிறுவனத்தின் மிக முக்கிய கேந்திரம் என்றும், வருகிற அறிகுறிகள் அனைத்தும் மிகவும் சாதகமாக இருப்பதால் 2010-ல் ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை இரண்டுமே புதிய சாதனையை எட்டும். கடந்த 15 ஆண்டுகளாக அமேரிக்காவை விட சீனாவின் ஆதிக்கமே ஆட்டோமொபைல் துறையில் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, ஒரு நாள் கூட ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உற்பத்திப் பணிகள் பாதித்ததில்லை என்றும் அந்த அளவு சிறப்பான தொழில் உறவுகளைப் பேணுவதாகவும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








