வருகிறது ஹோண்டா எலெக்ட்ரிக் கார்!

சுற்றுச் சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தாத வகையிலான வாகனங்களின் வரிசையில் இந்தக் காரை ஹோண்டா மோட்டார் நிறுவனம் தயாரிக்கிறது.
டொயோட்டா உள்ளிட்ட ஜப்பான் கார் உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். 2012ல் தனது மின்சாரக் காரை விற்பனைக்கு விடுவதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு நிஸ்ஸான் நிறுவனமும் மின்சாரக் கார் தயாரித்து விற்பனைக்கு விடுகிறது.
இவற்றுக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஹோண்டா மோட்டார்ஸ் அடுத்த ஆண்டே மின்சாரக் காரை விற்பனைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சந்தைகளில் முதல்கட்டமாக இந்தக் கார் விற்பனைக்கு வருமாம்.


Click it and Unblock the Notifications








