சென்னைக்கு வருகிறது நிஸ்ஸான் மைக்ரா

நிஸ்ஸான் நிறுவனத்தின் சிறிய ரக கார் மைக்ரா. தற்போது இங்கிலாந்தில் இதன் உற்பத்திப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவை சென்னைக்கு மாற்ற தற்போது நிஸ்ஸான் முடிவு செய்துள்ளது.
மைக்ரா இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மேலும், நிறைய மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் தனது சென்னைப் பிரிவை தொடங்கவுள்ளதாம் நிஸ்ஸான்.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் மைக்ரா உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது. முதலில் இந்திய சந்தையில் மட்டும் இந்த கார்கள் விற்கப்படும். சில மாதங்கள் கழித்து வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தொடங்கும்.
சென்னை பிரிவிலிருந்து ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மைக்ரா ஏற்றுமதி செய்யப்படுமாம்.


Click it and Unblock the Notifications








