சென்னையில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை-ஹூன்டாய்

ஹூன்டாய் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலை ஏற்கனவே சென்னை இருகாட்டுங்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஐ20, வெர்னா போன்ற கார்களி்ன் டீசல் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது அந்த நிறுவனம் இந்த கார்களின் டீசல் மாடல்களை ஜப்பானில் இருக்கும் தங்கள் நிறுவன கிளைகளில் இருந்து கொண்டு வர வேண்டியிருக்கிறது.
இதற்கு ஆகும் இறக்குமதி செலவு காரின் தயாரிப்பில் 25 சதவீத அளவுக்கு இருப்பதாக ஹூன்டாய் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த கார்களுக்கான டீசல் என்ஜினை இந்தியாவிலே தயாரிக்க ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. சுமார் ஆண்டுக்கு 50 ஆயிரம் என்ஜின்கள் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை விரைவில் துவக்க இருக்கிறது. 2010ம் ஆண்டு டிசம்பர் முதல் இங்கு தயாரிக்கப்படும் என்ஜின்களுடன் கார்கள் வெளிவரும்.


Click it and Unblock the Notifications








