குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட்

Ford figo
அமெரிக்காவில் திவாலாகமல் தப்பித்த ஒரே பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு தற்போது இந்திய சந்தையை குறிவைத்து சிறிய கார்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இதையடுத்து இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார்.

இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75 சதவீதம் குட்டி கார்கள் என்பதால் சூசுகி, டாடாவுக்கு போட்டியாக போர்டும் பிகோ கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த கார்கள் சென்னை போர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

போர்டு நிறுவனத்தை தொடர்ந்து டோயோடோ, வோல்க்வேகன் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் சிறிய கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன.

சூசுகி முதலிடம்...

ஆனால், இந்திய குட்டி கார் சந்தையில் சூசுகி சுமார் 7 மாடல்களுடன் பாதியை தன்வசம் வளைத்து போட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 53 சதவீதம் சூசுகி நிறுவனத்தை சேர்ந்தது. ஹூன்டாய் 21 சதவீதம், டாடா 12 சதவீதத்துடன் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன.

இந்த வரிசையில் போர்டு 7வது இடத்தில் இருக்கிறது.

போர்டு நிறுவனம் 1996ம் ஆண்டில் சென்னை மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இதில் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் இந்தத் தொழிற்சாலையை ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவவும் போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது.

இதனால் சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவுள்து.

இதன்மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலாளர் எம்.எப்.பாருகி, போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மைக்கேல் போனஹம் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 24, 2009, 14:23 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+