உலகின் அதிவேக கார் அல்டிமேட் ஏரோ-விரைவில் இந்தியாவில்

Ultimate Aero
உலகின் அதிவேக காரான அல்டிமேட் ஏரோ விரைவில் இந்திய சாலைகளை தொட இருக்கிறது. ரூ. 6 கோடி விலை கொண்ட இது விற்பனைக்கு வரும் போது இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கார் என்ற பெருமையையும் பெறும்.

இந்த வகை கார்களை 1999ம் ஆண்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஷெல்பி சூப்பர்கார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிறுவனம் துவக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கார் ஒட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்ட நிறுவனத்தின் தலைவர் ஜெராத் ஷெல்பி தனது கனவு காரான இதை வடிவமைத்துள்ளார்.

கடந்த 2007 செப்டம்பர் 13ம் தேதி இந்த கார் உலகின் வேகமான காராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் கடைசி மாடல் சுமார் 414.31 கிமீ வேகத்தில் ஓடி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இது தாங்கள் பதிவு செய்த வேகத்தை விட 0.52 கிமீ அதிகம் என்பதை கின்னஸ் நிறுவனமே ஒப்புகொண்டுள்ளது. முன்னதாக புகாட்டி வைரானின் கார் 408.47 கிமீ வேகத்திலும், கியோனிக்செக் கார் 388 கிமீ வேகத்திலும் சென்றதே சாதனையாக இருந்தது.

தற்போது அல்டிமேட் ஏரோ காரின் முன்பாக வடிவமைப்பு ஏரோடைனமிக்ஸ் முறையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் ரேடியேட்டர்களுக்கு 20 சதவீதம் கூடுதலாக காற்று கிடைக்கும். விரைவில் சூடாகாது.

அல்டிமேட் ஏரோ காரில் ஏரோ பிரக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்விட்ச் மூலம் ரியர் ஸ்பாய்லர் சிஸ்டத்தை கட்டுப்படுத்துகிறது.

காரின் உட்பக்கம் முழுமையும் கார்பன் நார்களால் இழைக்கப்பட்டுள்ளது. இந்த காரி் அடுத்த மாடல்களில் ஷெல்பி சூப்பர்கார்ஸ் நிறுவனம் சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களையும் புகுத்த இருக்கிறது.

1287 பிஹெச்பி திறன் கொண்ட இந்த அதிவேக காரின் எடை 422 பவுன்ட்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 24, 2009, 10:16 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+