அடுத்த ஆண்டு இந்தியாவில் நிஸ்ஸான் ஸ்போர்ட்ஸ் கார்

Nissan to launch sports car Z370 in India in 2010
மொகாலி: நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மொகாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிறுவனத்தின் துணை தலைவர் ஜிஎம் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

நிஸ்ஸான் நிறுவனம் வரும் 2012ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 9 புது மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவைகளில் 5 மாடல்களை சென்னையில் தயாரிக்க இருக்கிறது. மற்றவை முழுமையாக இந்தியாவுக்குள்இறக்குமதி செய்யப்படும்.

இதில் ஒன்று தான் ஸ்போர்ட்ஸ் காரான இஜட் 370. அது அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்திய சாலைகளுக்கு வரும். இந்தியாவில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார்களின் விற்பனை குறைவு தான். ஆனால் அது விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அதே போல் 2010ல் மிக்ரா ரக கார்களில் மூன்று மாடல்களை வெளியிட இருக்கிறோம். இவைகளை பெட்ரோல், டீசல் இரண்டிலுமே பயன்படுத்தபடலாம். இவற்றின் விலை ரூ. 5 லட்சத்துக்கு அருகில் இருக்கும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 29, 2009, 12:17 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+