இந்தியாவில் டெய்ம்லர் ட்ரக் உற்பத்தித் திட்டம் ஒத்திவைப்பு

ஜெர்மனியின் புகழ்பெற்ற கார் மற்றும் ட்ரக் உற்பத்தி நிறுவனமான டெய்ம்லர் ஏஜி, சென்னையில் தனது ட்ரக் உற்பத்தியைத் துவங்கிவிருந்தது. 2010 -ம் ஆண்டு உற்பத்தி துவங்கும் என முதலில் அறிவித்திருந்தனர்.
அதற்கென சென்னைக்கு அருகே ஒரகடத்தில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை ஹீரோ குழுமத்துடன் இணைந்து மேற்கொண்டது.
ஆனால் இப்போது திடீரென இந்தத் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ட்ரக் விற்பனை பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதாலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் மார்க் லிஸ்டோசெல்லா அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








