விரைவில் ஜிஎம் மினிவேன்

'எங்கள் சீன நிறுவனத்துடன் இணைந்து இந்த மினிவேன்களை உற்பத்தி செய்யப்போகிறோம்' என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் கார்ல் ஸ்லைம் அறிவித்துள்ளார்.
அதேநேரம், சிறிய ரகக் கார்கள் பிரிவில் தங்கள் மூன்றாவது தயாரிப்பான 'பீட்'டை அறிமுகப்படுத்துவதற்குதான் இப்போது முக்கியத்துவம் தருவதாக அவர் அறிவித்துள்ளார். இந்தக் கார் வரும் 2010-ம் ஆண்டு அறிமுகமாக உள்ளதாம்.
இந்த கார் அறிமுகத்துக்குப் பிறகுதான் மினிவேன் அறிமுகமாகும் என்றும், இந்த வகை வணிக வாகனத்துக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இருக்கும் என நவம்புவதாகவும் ஸ்லைம் கூறினார்.
மினிவேன் என்பது மாருதி ஆம்னி, டாடா ஏஸ் மேஜிக் போன்ற வாகனம் என இந்திய வாகன உற்பத்தியாளர் கழகம் அறிவித்துள்ளது. இந்த வகை வாகனத்தை சீனாவில் அரசு உதவியுடன் தயாரிக்கிறது ஜிஎம். மாதத்துக்கு 80000 மினிவேன்களை அங்கே விற்று மார்க்கெட் லீடராகவும் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








