டாடா நானோ கார்களில் மின் கசிவு-தீ விபத்து

இதனால் அனைத்துக் கார்களிலும் மின் இணைப்புகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டியரிங் பகுதியில் உள்ள ஸ்விட்ச் போர்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் தலா ஒரு காரில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கார்களில், ஸ்டியரிங் பகுதியிலிருந்து பெரும் புகை வந்துள்ளது. காரின் இக்னீஷியன் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தீப்பிடித்துள்ளது. மேலும், இதன் காரணமாக ஸ்டியரிங்கை ஒட்டியுள்ள பல பாகங்கள் வெப்பத்தில் உருகிப் போய் விட்டனவாம்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ள அனைத்துக் கார்கள் மற்றும் தயாரிப்பில் உள்ள கார்கள் அனைத்திலும் ஸ்விட்ச் போர்டில் மின் கட்டமைப்பை மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் விற்பனை செய்யப்பட்ட கார்களை திரும்பி வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது மிகச் சாதாரண பிரச்சினைதான். ஸ்விட்ச் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக புகைந்து போயுள்ளது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக சில பகுதிகள் உருகிப் போயுள்ளன. மின்கசிவு காரணமாக இது ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் சேதமடைந்த கார் பழுது பார்க்கப்பட்டு கொடுக்கப்பட்டு விட்டது. லக்னோ கார் சரிபார்க்கப்பட்டு வருகிறது. டெல்லி வாடிக்கையாளர் இன்னும் தனது காரை பழுது பார்க்க தரவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications







