டாடா மோட்டார்ஸின் ரேஞ்ச் ரோவர்-விலை ரூ. 98.5 லட்சம்!

மும்பையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 98.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரான்ட்டான லேன்ட் ரோவரின் புதிய மாடல் கார் இது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் இது கிடைக்கும்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சக்தி வாய்ந்த புதிய என்ஜின், புரட்சிகரமான இன்டீரியர் தொழில்நுட்பங்கள் 2010 ரேஞ்ச் ரோவரின் சிறப்பு அம்சங்களாகும்.
லேன்ட் ரோவர் காரின் சகல வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் கடந்த ஆண்டு ஜாகுவார் லேன்ட் ரோவர் கார் பிராண்டை அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது நினைவிருக்கலாம்.
2009-09ம் ஆண்டுக்கான டாடா மோட்டார்ஸ் நிறுவன வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், ஜாகுகவார் லேன்ட் ரோவர் வகையின் புதிய மாடல்கள் (ஹைபிரிட் உள்பட) வரும் ஆண்டுகளில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் லேன்ட்ரோவர் தனது 3 படைப்புகளான டிஸ்கவரி 4, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








