மாருதி சுசுகியின் ஏ-ஸ்டார் ஏற்றுமதி 1 லட்சத்தை தாண்டியது

மாருதி சுசுகி தனது ஏ-ஸ்டார் மாடல் காரை இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. உலகளவில் சிறந்த மாடல் வரிசையில் ஐந்தாவது இடம் பிடித்ததை அடுத்து காரின் ஏற்றுமதியும் அதிகரித்தது.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி துவங்கிய பின்னரே விற்பனையில் ஏறுமுகம் காணப்பட்டது. ஐரோப்பாவுக்கு மட்டும் ஏ-ஸ்டார் மாடலில் 93 ஆயிரத்து 562 கார்களை சுசுகி அனுப்பியுள்ளது.
பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த மாடலுக்கு வரவேற்பு உள்ளது. ஜெர்மனியில் ஏ-ஸ்டாரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நம்பர்1 என்ற பெயரும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








