சென்னையில் 25 லட்சம் இலக்கை எட்டியது ஹூண்டாய்

By
Hyundai i10 D-Lite
சென்னை: சென்னையி்ல் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் தயாராகும் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த 1998ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் முதலில் சான்ட்ரோ மாடல்களை ஹூண்டாய் தயாரித்தது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் மிகவும் வரவேற்பை பெற்ற சான்ட்ரோ மாடல்களில் மட்டும் 15 லட்சம் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அர்விந்த் சக்ஸேனா கூறுகையில், 'அதிக கார் தயாரிப்பில் நாட்டின் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது மட்டுமல்லாமல், மிக துரிதமாக இந்த இலக்கை அடைந்ததில் மிகவும் பெருமை கொள்கிறோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக, சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்பு கார்கள் குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லை. ஆனால் தற்போது இந்திய தயாரிப்பு கார்களுக்கு தரம் மற்றும் திறன் அடிப்படையில் வெளிநாடுகளில் மதிப்பு பெருமளவு கூடியுள்ளது' என்றார்.

இந்திய கார் சந்தையில் 20.5 சதவீதத்தை கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், தற்போது தனது இரண்டு தொழிற்சாலைகளில் சேர்த்து ஆண்டுக்கு மொத்தம் 6,00,000 கார்களை தயார் செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 8, 2009, 15:06 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+