சுசுகி-வோக்ஸ்வோகன் பரஸ்பர ஒப்பந்தம்

இதன்படி சுசுகி மோட்டார்ஸ், வோக்ஸ்வோகன் நிறுவனத்துக்கு தனது 19.9 சதவீத பங்குகளை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளது. இதில் வரும் வருவாயில் பாதியளவை வோக்ஸ்வோகனில் சுசுகி முதலீடு செய்யும்.
தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்களின் தேவை அதிகரித்து வருவதால், அதனை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதாக அவை தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் வலுவாக கால் பதித்துள்ள சுசுகியும், ஐரோப்பிய நாடுகளின் கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் வோக்ஸ்வோகன் இணைந்திருப்பது நல்ல கூட்டாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








