அடுத்த மாதம் புதிய 370இசட் ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தும் நிஸ்ஸான்

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவில் அடுத்த மாதம் (ஜனவரி) 370இசட் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகப்படுத்தப்படும். முழுமையான இறக்குமதி கார் வரிசையில் இது 3வது பிராண்ட் ஆகும்.
இதற்கு முன்பு தியானா மற்றும் எக்ஸ் ட்ரெய்ல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தியாவில் தனது இறக்குமதி கார் வரிசையில் நான்கு மாடல்களை அறிமுகப்படுத்த நிஸ்ஸான் திட்டமிட்டுள்ளது. 3வது மாடலாக 370 இசட் அறிமுகமாகிறது. 4வது மாடல் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த கார் ஒரு எஸ்.யு.வி ரகமாக இருக்கும் வாய்ப்புள்ளது.
நிஸ்ஸான் கார்களுக்கு உலக சந்தையில் 5.67 சதவதீ பங்கு உள்ளது. இந்தியாவில் தனது மார்க்கெட் பங்களிப்பை 5.5 சதவீதமாக உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. 3 முதல் 5 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் அமையவுள்ள உற்பத்திப் பிரிவின் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்றார்.
இங்கிலாந்தில் உள்ள தனது உற்பத்திப் பிரிவில் நிஸ்ஸான் தனது மைக்ரா மாடல் கார்களை தயாரித்து வந்தது. தற்போது அதை நிறுத்தி விட்டது. அதற்குப் பதிலாக சென்னையில் புதிய உற்பத்திப் பிரிவை நிஸ்ஸான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானைத் தவிர்த்து சீனா, தாய்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நிஸ்ஸானின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. அந்த வரிசையில் சென்னையும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இன்னொரு நாட்டிலும் தனது உற்பத்திப் பிரிவை நிஸ்ஸான் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








