வெர்ஸா தோல்வியைச் சரிகட்ட ஓ2: மாருதியின் புது பிளான்!

இப்போது வெர்ஸா தயாரிப்பை நிறுத்திவிட்ட மாருதி புதிதாக ஒரு மினி வேனைத் தயாரிக்கிறது. இதற்கு ஓ2 என்று பெயர் சூட்டியுள்ளது மாருதி.
பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த கார், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கிறது.
இதற்கிடையே 2006-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரிலும், சில மாற்றங்களைச் செய்து அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது மாருதி.
ஹெட் லைட் மற்றும் முன்பக்க க்ரில் ஆகியவை மாற்றப்படுவதால், புதுப் பொலிவு தரப்போகிறார்களாம் ஸ்விப்டுக்கு.
இது தவிர, பெட்ரோல் இன்ஜினின் சக்தியை 90 பிஎச்பி ஆகவும், டீசல் இன்ஜினின் சக்தியை 80 பிஎச்பி ஆகவும் மாற்றப் போவதாகவும் மாருதி நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








