ஜிஎம் நிறுவன தலைவர் விலகல்: ஒபாமா அதிரடி

Wagoner
வாஷிங்டன்: ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான ரிக் வாகனர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுக்கு உடனடியாக பணிந்த வாக்னர் இன்று பதவியிலிருந்து விலகுகிறார்.

அமெரிக்க ஆட்டோமொபைல் துறையைச் சீரமைக்க புதிய நிதிச் சலுகைகளை இன்று ஒபாமா அறிவிக்கிறார். தனது அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் ஜிஎம் நிறுவன தலைவர் வாக்னர் பதவி விலகியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அதிபர் ஒபாமா.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜிஎம் மற்றும் கிறிஸ்லர் இரண்டும் பல மாதங்களுக்கு முன்பே பெய்ல் அவுட் (நிதி உதவி) கேட்டிருந்தன. 21 பில்லியன் டாலர் நிதியுதவி இல்லாவிட்டால் ஜிஎம் மற்றும் கிறிஸ்லர் நிறுவனங்கள் திவாலாகிவிடும் என ஏற்கெனவே அறிவித்திருந்தன.

ஆனால் 'இந்த நிதிச்சலுகையை பெறுவதற்கு முன் பல உள் மாறுதல்களை இந்த நிறுவனங்கள் செய்தாக வேண்டும். அப்போதுதான் இப்போதுள்ளதை விட போட்டிகள் மிக்கதாக ஆட்டோமொபைல் துறை திகழும். இந்த மாறுதல்களைச் செய்தால் மட்டுமே நிதி உதவி திட்டத்துக்கு இவை தகுதி பெறும்' என உத்தரவிட்டிருந்தார் அதிபர் ஒபாமா.

ஆனால் அவர் எதிர்பார்த்த மாறுதல்கள் எதையும் ஜிஎம் நிறுவனம் செய்யவில்லை. எனவே இன்றைய நிதிச் சலுகை அறிவிப்புகள் வருவதற்குள் நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்பிலிருந்து வாக்னர் வெளியேறிவிட வேண்டும் என ஒபாமா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை உடனடியாக ஒப்புக் கொண்டு, பதவியிலிருந்து விலகுகிறார் ஜிஎம் தலைவர் வாக்னர் (வேறு வழி?!).

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2009, 10:41 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+