நிஸ்ஸான் கார் தொழிற்சாலை: அடுத்த ஆண்டு 5000 பேருக்கு வேலை!

பணியாளர்கள் தவிர, மூலப் பொருள் அளிப்போர், முடிவுற்ற பொருட்களை சந்தைப்படுத்துவோர், முகவர்கள் என 5000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை அருகே படப்பை ஒரகடத்தில் உருவாகிவரும் இந்த நிஸ்ஸான் தொழிற்சாலை அடுத்த ஆண்டு மே மாதம் தனது உற்பத்தியை முழு அளவில் துவக்குகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஏற்கெனவே 300 பேர் பணியாற்றி வருகின்றனர். முக்கியமான தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இதில் அடங்கும். இவர்களில் பாதிப் பேருக்கு ஜப்பானின் நிஸ்ஸான் தொழிற்சாலையில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இவர்களைத் தவிர மேலும் 5000 தொழிலாளர்கள் மற்றும் டெக்னீஷியன்களை நியமிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்க உள்ளது.
2010-ம் ஆண்டுக்குள் 1200 பேரையும், முழு அளவில் உற்பத்தி நடக்கும்போது மேலும் சில ஆயிரம் பேரையும் நியமிக்கப் போகிறார்களாம்.
பெரும்பாலும் என்ஜினீயரிங் மற்றும் டிப்ளமா படித்தவர்களே இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், விரைவில் பணி நியமன அறிவிப்பை நிஸ்ஸான் - ரெனால்டு நிறுவனம் அறிவிக்கும் என்றும் தெரிகிறது.
இந்த நேரடி வேலை வாய்ப்பு தவிர, டீலர்ஷப், சப்ளையர்ஸ், கார்களை சந்தைப்படுத்தும் பணியாளர்கள் என பல ஆயிரம் பேர் சுய தொழில் அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








