விபத்துகள்: டாடா மோட்டார்ஸுக்கு ரூ4 கோடி அபராதம்- டெல்லி சட்டசபையில் அமளி

By
TATA Bus
டெல்லி: டாடா மோட்டார்ஸ் தயாரித்த தாழ்தள பேருந்துகள் தீப்பிடித்து எரிவதால், அதன் கவனக்குறைவுக்காக டெல்லி அரசு டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 4 கோடி அபராதம் விதித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தயாரிப்பில் உருவான தாழ்தள பேருந்துகள் நான்கு 3 வாரங்களில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, முறையான பராமரிப்பு இல்லை என்று கூறி இந்த அபராதத்தை விதித்துள்ளது டெல்லி அரசு.

மேலும், டாடா மோட்டார்ஸுக்குத் தர வேண்டிய ரூ. 150 கோடி நிலுவைப் பணத்தையும் நிறுத்தி வைப்பது என்றும் டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதவிர தாங்கள் கொடுத்த பேருந்துகளில் உள்ள குறைகளை நீக்க டாடா மோட்டார்ஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அது தீர்மானித்துள்ளதாம்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் கூறுகையில், டாடா நிறுவன அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம்.

பஸ்களின் பராமரிப்புக்கு அவர்கள்தான் பொறுப்பாவார்கள். இதுபோன்ற கவனக்குறைவை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

டாடா மோட்டார்ஸ் கொடுத்துள்ள தாழ் தளப் பேருந்துகளில் இதுவரை 6 பஸ்கள் தீப்பிடித்துள்ளன என்று டெல்லி அரசு கூறுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 15, 2009, 10:40 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+