இந்தியாவுக்கான சிறிய கார் - ரூ. 800 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்

இந்தியாவுக்கான பிரத்யேக குட்டிக் கார் இது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சிறிய ரக காரை களம் இறக்கவுள்ளது ஹூண்டாய்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வரும் ஹூண்டாய் நிறுவனம், தனது புதிய சிறிய ரக காரை, சான்ட்ரோ காரை விட சிறிதாக வடிவமைத்துள்ளதாம். சென்னையில்தான் இந்த சிறிய ரக கார் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர், தலைமை செயலதிகாரி ஹான் வூ பார்க் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய சிறிய ரக கார் தயாரிப்புக்காக ரூ. 800 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். சென்னைப் பிரிவில் இந்தப் பணி நடைபெறும்.
சான்ட்ரோவை விட இது சிறிதாக இருக்கும். விலை இன்னும் குறைவாக இருக்கும். இப்போது முதல் குறைந்தது 24 மாதங்களில் இந்தக் கார் இந்தியாவில் தொடங்கப்படும். தற்போது வடிவமைப்பு அளவில் இந்தத் திட்டம் உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications








