மிட்சுபிஷி ஃபியூசோ டிரக்குகள்- 2010ல் இந்தியாவில் அறிமுகம்

ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான மிட்சுபிஷி ஃபியூசோ டிரக் அண்ட் பஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் 85 சதவீத பங்குகளை வைத்துள்ளது ஜெர்மனியின் டெய்ம்லர் ஏஜி.
இந்தியாவில் தொழில் சார்ந்த ஆட்டோமொபைல் சந்தை வளர்ந்துவருவதை கருத்தில் கொண்டு சர்வதேச பிரபலமான மிட்சுபிஷி ஃபியூசோ டிரக்குகளை அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த டெய்ம்லர் முடிவு செய்துள்ளது. அதன் பிறகு 2012ல் பல்வேறு புதிய அறிமுகங்களை இந்நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
டெய்ம்லர் நிறுவனம் ஹீரோ குழுமத்துடன் சேர்ந்து சென்னையில் ரூ.4,400 கோடியில் ஆட்டோமொபைல் தொழிற்சாலை அமைக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஆனால், சர்வதேச நிதி நெருக்கடியை காரணம் காட்டி இந்த தி்ட்டத்தில் இருந்து ஹீரோ குழுமம் விலகிக் கொண்டது. தற்போது 'சொலோ'வாகவே டெய்ம்லர் தனது திட்டத்தை தொடரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








