உலகின் மாசற்ற கார்...மெருகேற்றப்படும் நானோ!

By
Tata Nano
மும்பை: உலகின் மலிவு விலைக் கார் எனும் பெருமைக்குரிய டாடா நானோவின் அதி உயர் தயாரிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஆனால் இதுவும் குறைந்த விலைக்கே தரப்படும் என்றும், தரம் உயர்த்தப்பட்டதால் பெரிய அளவில் விலை உயர்வு இருக்காது என்றும் டாடா அறிவித்துள்ளது.

விலை அதிகமுள்ள பொருட்களை குறைந்த அளவு விற்று லாபம் பார்ப்பது ஒரு வகை. விலை குறைவான பொருட்களை அதிக எண்ணிக்கையில் விற்று அதிக லாபம் பார்ப்பது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகைதான் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்தது என்ற முடிவுக்கு டாடா வந்துவிட்டது.

அதன் விளைவுதான் சிறிய ரகக் கார்களை முடிந்த வரை குறைந்த விலையில் விற்று வருகிறது. இதனைச் சொன்னவர் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா.

அவரது இந்த சிந்தனையின் விளைவுதான் நானோ கார். இந்தக் காருக்கு மக்களிடம் ஏக கிராக்கி இருந்தாலும் அதை சப்ளை செய்யத்தான் டாடாவால் முடியவில்லை.

இந்த நிலையில் இப்போதுள்ள நானோவின் வடிவத்தை இன்னும் அழகாக்கி, முழுக்க முழுக சுற்றுச்சூழலுக்கு உகந்த, மாசற்ற காராக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது டாடா.

ஏற்கென பல விருதுகளைக் குவித்து வரும் நானோ, அடுத்து உலகின் மிகச் சிக்கனமான உயர்தரமான கார் என்ற சிறப்பையும் பெறத் தயாராகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 4, 2009, 12:44 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+