நிஸ்ஸானின் சர்வதேச கேந்திரமாகும் சென்னை!

Nissan
சென்னை: குறைந்த விலைக் கார் உற்பத்தியில் சென்னையை தனது முக்கிய சர்வதேச கேந்திரமாக அறிவித்துள்ளது நிஸ்ஸான் மோட்டார் கம்பெனி.

சென்னை படப்பையை அடுத்துள்ள ஒரகடத்தில் இந்த நிறுவனம் ரூ.4500 கோடி முதலீட்டில், 640 கோடி பரப்பளவில் புதிய சிறிய ரக கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை, ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து துவங்குகிறது.

வரும் 2010-ம் ஆண்டு முதல் முழுவீச்சில் செயல்படவிருக்கும் இந்த தொழிற்சாலையில், அடுத்த தலைமுறைக்கான சிறிய ரக, குறைந்த விலை கார்கள் உற்பத்தியாகவுள்ளன. இந்தக காருக்கு மைக்ரா அல்லது மார்ச் ஆகிய பெயர்களைப் பரிசீலித்து வருகிறது நிஸ்ஸான். சிறிய ரகக் காராக இருந்தாலும் டீஸல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வருகிறது.

இந்தக் கார்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளன.

இந்த ஒரு பிராண்டோடு நின்றுவிடப் போவதில்லையாம் நிஸ்ஸான். அடுத்த இரு ஆண்டுகளுக்குள் 4 புதிய மாடல் கார்களையும் இதே தொழிற்சாலையில் தயாரித்து உலகம் முழுக்க சப்ளை செய்யும் என்று தெரிகிறது.

இதன் மூலம் தனது உலக அளவிலான நெட்வொர்க்கில் சென்னைக்கு பிரதான இடம் தருகிறது நிஸ்ஸான். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், நிஸ்ஸானின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இதர நாடுகளில் உற்பத்திக்கான சாதகமான சூழல் நிலவாததே.

இந்த பொருளாதார மந்தத்திலும், இந்தியாவில் மட்டுமே மிகமிக குறைந்த சம்பளத்துக்கு தொழிலாளர்களும், உற்பத்தி வளங்களும் கிடைக்கின்றன. ஆனால் நிஸ்ஸானின் சொந்த நாடான ஜப்பானில் படுமோசமான சூழல் நிலவுகிறது. மிட்சுபிஷி உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது பல தொழிற்சாலைகள் மூடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு 2,00,000 கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இவற்றில் 1,10,000 கார்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் உற்பத்தி அளவு 10 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் இவற்றில் பாதி ஏற்றுமதிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் நிஸ்ஸான் இந்தியா அறிவித்துள்ளது. இதன் ஏற்றுமதி தேவைகளுக்காக எண்ணூர் துறைமுகத்தில் தனி தளம் ஒன்றையே ஒதுக்கியுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 18, 2009, 17:29 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+