மீண்டு(ம்) வரும் ரெனால்ட்!

பிரான்ஸின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சில ஆண்டுகளுக்கு முன் தனது கிளையை சென்னையில் துவங்கத் திட்டமிட்டிருந்தது.
இப்போது மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து லோகன் ரக கார்களை அந்த நிறுவனம் தயாரித்து வந்தாலும் தனியாக ஆலை அமைத்து தனது பிற ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரேனால்ட் திட்டமிட்டிருந்தது.
ஆனால் உலகை அச்சுறுத்திய பொருளாதார மந்தம் ரெனால்டின் திட்டங்களை முடக்கிப் போட்டது.
சென்னை தொழிற்சாலைத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதாக அப்போது அறிவித்தது ரெனால்ட்.
இப்போது மந்த நிலையிலிருந்து மீண்டு வரும் சூழல் உள்ளதால், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மீண்டும் இந்தியாவில் தங்கள் கார் உற்பத்தியைத் துவங்கும் திட்டம் உள்ளதாக ரெனால்டின் ஆசிய - பசிபிக் நிர்வாகக் கமிட்டி தலைவர் கட்சுமி நகமுரா அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 50000 முதல் 60000 வரையிலான எண்ணிக்கையில் கார்களை உற்பத்தி செய்யவிருப்பதாக கட்சுமி தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த ஆட்டோ ஷோவில் அவர் இந்த தகவலை நிருபர்களிடம் கூறினார்.


Click it and Unblock the Notifications








