பார்ட்னரை தேடும் ரேவா எலெக்ட்ரிக் கார் நிறுவனம்

இத்தாலி நாட்டின் சிசிலியா பகுதியில் அமைந்துள்ள ஃபியட் தொழிற்சாலையின் மூலம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க, சிசிலிய பைனான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் ரேவா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வரும் 29ம் தேதி இதற்கான ஒப்பந்தும் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. ஃபியட் தொழிற்சாலையில், சிசிலி நிதி நிறுவன மூலதனத்தில் ரேவா எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையை ரேவா துணை தலைவர் சேட்டன் மைனி உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், சிசிலிய நிறுவனத் தலைவர் சிமோன் சிமினோ, சிக்கலில் உள்ள ஃபியட் தொழிற்சாலையை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
இதனால், இவர்களின் ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்படுமா என்பது சந்தேகம் என்றே கூறுகின்றனர். இதனால், எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு பொறுத்தமான பார்ட்னர்களை இன்னமும் தேடிக்கொண்டிருப்பதாக ரேவா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








