ரூ.6 கோடி மெர்சிடிஸ் பென்ஸ்-இந்தியாவில் அறிமுகம்

12 சிலிண்டர் இரட்டை டர்போ இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த காஸ்ட்லி காரின் வேகம் அதிகப்பட்சமாக மணிக்கு 210 கி.மீ வரை செல்லும்.
கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் போன்றவை துளைக்க முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இந்த காரில் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சரானாலும் தாக்குப்பிடிக்கும் ரன் ஃபிளாட் டயர்கள், விபத்துகளின் போது வெடிக்காமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய செல்ஃப் சீலிங் ப்யூயல் டாங்க் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் உள்ளன.
காரை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ்-பென்ஸ் இயக்குனர் சுஹாஸ் கட்லாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்,
'மெர்சிடிஸ்-பென்சின் எஸ் கார்டு மாடலின் விலை வாடிக்கையாளரின் ஆர்டருக்கு ஏற்றபடி, இணைக்கப்படும் உபகரணங்களைப் பொறுத்து அமையும்.
ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்கார்ட் மாடல் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வாகனமாக திகழும்' என்றார்.


Click it and Unblock the Notifications








