5.4 லட்சம் கார்கள் வாபஸ்- நிஸான் மோட்டார்ஸ் முடிவு

'பிரேக் பெடல் பின்' மற்றும் எரிபொருள் அளவு மானி உள்ளிட்டவற்றில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் கூறப்படுவதால் இந்த முடிவுக்கு நிஸான் நிறுவனம் வந்துள்ளது.
இதன்படி குறிப்பிட்ட பிராண்ட் கார், ஸ்போர்ட்ஸ் கார், மினி வேன் உள்ளிட்டவற்றை திரும்பப் பெற நிஸான் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக 2008 முதல் 2010 வரை தயாரிக்கப்பட்ட டைடான், அர்மடா, குவெஸ்ட், இன்ஃபினிட்டி க்யூஎக்ஸ் 56 மாடல்கள் திரும்பப் பெறப்படும்.
இந்த கோளாறுகளால் எங்கும் விபத்து போன்ற விபரீதங்கள் நேர்ந்ததாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் இல்லை.
எனினும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5.4 லட்சம் கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








