பெட்ரோல் என்ஜின் உற்பத்தியை அதிகரிக்கும் மாருதி

இதன் மூலம் குர்காவ்ன் தொழிற்சாலையில் அடுத்தாண்டு 5 லட்சம் யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாருதியின் மாடல்களில் ஸ்விஃப்ட், ஏ-ஸ்டார், ரிட்ஸ், எஸ்டிலோ உள்ளிட்டவை கே-ஸீரீஸ் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மாருதி 800 தவிர அனைத்து மாடல்களிலும் இந்த இன்ஜின்களை பயன்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குர்காவ்ன் மானேசரில் தொழிற்சாலை விரிவாக்கம், ரோடாக்கில் புதிய தொழிற்சாலை என கடந்த 3 ஆண்டுகளில் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை ரூ.12 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது.
நடப்பாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 10 லட்சமாவது கார் (மில்லியன்த் கார்) வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. விழாவில் கலந்துகொள்ள வந்த சுசுகி மோட்டார் நிறுவன தலைவர் ஒசாமு சுசுகி இத்தகவலை தெரிவித்தார்.
சுசுகி மேலும் குறிப்பிடுகையில், 'தற்போதைய நிலவரப்படி, உலகத் தர கார் தயாரிப்பாளர்கள் அனைவரும் இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். எனவே நாங்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளோம்.
இப்போது ஒரு மில்லியன் என்ற இலக்கை அடைந்துவிட்டோம். ஆனால், ஆண்டுக்கு இரண்டு மில்லியன் என்ற இலக்கை அடைவது மிகவும் சிரமமானது' என்றார்.


Click it and Unblock the Notifications








