அசோக் லேலண்ட் மற்றும் பஜாஜூடன் இணையும் நிஸ்ஸான்!
டெல்லி: ஜப்பானின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளர்களான நிஸ்ஸான் மோட்டார்ஸ் சிறிய ரகக் கார்களைத் தயாரிக்க இந்தியாவில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவுகிறது.
ஏற்கெனவே ரெனா(ல்ட்) நிறுவனத்துடன் இணைந்து ஒரகடத்தில் சிறிய ரக கார் உற்பத்தித் தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது நிஸ்ஸான். இந்தியாவைப் பொறுத்தவரை நிஸ்ஸானுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டாளிகள் உள்ளதால், அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து புதிய நிறுவனங்களைத் தொடங்குகிறது நிஸ்ஸான்.
அந்த வகையில் இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து சிறிய ரகக் கார்கள் உற்பத்தித் தொழிற்சாலையை துவங்கவிருக்கிறது. மாருதி ஆல்டோ ரகக் கார்களுக்கு போட்டியாக, ஆல்டோவைவிட குறைந்த விலையில் இந்த கார்கள் விற்கப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனத் தலைவர் கிமினோபு டோகுயாமா அறிவித்துள்ளார்.
அசோக் லேலண்ட் தவிர, பஜாஜ் குழுமத்துடனும் நிஸ்ஸான் நிறுவனம் கூட்டாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








