டொயோட்டோ பார்ச்சூனர்-குவிந்த ஆர்டர்கள்

இதுகுறித்து நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணை நிர்வாக இயக்குநர் சந்தீப் சிங் கூறுகையில் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் ஆர்டர்கள் பெறப்படுகின்றன.
இந்த ஆர்டர்களை கொடுத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர்-டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என்றார்.
இதுவரை 8500 பார்ச்சூனர் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஒருகாரின் விலை ரூ.19.35 லட்சமாகும் (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை)
4000 பார்ச்சூனர் கார்களுக்கு ஆர்டர்கள் குவிந்ததால், கடந்த ஜனவரி மாதம் புதிய கார்களுக்கான ஆர்டர்களைப் பெறுவதை டொயோட்டோ நிறுத்தி வைத்தது நினைவிருக்கலாம்.
இந்த ஆர்டர்களுக்குரிய கார்கள் செப்டம்பர் மாதத்தில்தான் டொயோட்டோ கொடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பார்ச்சூனர் கார்களை டொயோட்டோ அறிமுகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications








