2 ஆண்டுகளில் 6 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ஜிஎம்

By
Chevrolet New Model
மும்பை: அடுத்த 2 ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் புதிதாக 6 மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் ஏவியோ- யுவிஏ, ஆப்ட்ரா, க்ரூஸ், ஸ்பார்க், பீட், ஏவியோ செடான், டவேரா எஸ்யுவி கார்கள் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் ஜெனரல் மோட்டார்ஸின் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவின் துணை தலைவர் கூறுகையி்ல்,

இந்திய கார் சந்தையில் அனைத்து ரக கார்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. புது மாடல்களை அறிமுகப்படுத்துவது தான் சந்தையில் தாக்குபிடிப்பதற்கான ஒரே வழி. எங்கள் நிறுவனம் இந்தியாவில் எல்சிவி கார்களை தயாரிக்க 100 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.


பீட் மற்றும் ஸ்பார்க் கார்கள் தயாரிக்கும் ஹலோல் தொழிற்சாலையில் தான் இந்த எல்சிவி-க்கள் தயாரிக்கப்படும். ஜெனரல் மோட்டார்ஸ் நடத்தவிருக்கும் இசை விருதுகள் நிகழச்சிக்கு பாலிவுட் இசை உலகின் ராணி ஆஷா போன்ஸ்லே பிராண்ட் அம்பாசடராக இருப்பார்.

இன்னும் 2 ஆண்டுகளில் ஜெனரல் மோட்டார்ஸ் 5 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும். வோல்ட் எலக்ட்ரிக் கார் வரும் 2010-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். எப்படியும் இந்திய கார் சந்தையில் முன்னோடியாக இருப்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். அடுத்தபடியாக டயர் II மற்றும் டயர் III நகரங்களில் மினி கார்கள் மற்றும் ஹாட்ச்பேக் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ஏற்கனவே அந்த நகரங்களில் உள்ள 10 ஷோரூம்களில் 100 சதவிகித விற்பனை நடப்பதால் டீலர்கள் மகிழச்சியில் உள்ளனர். தாலேகான் யூனிட்டில் இன்னும் 10 நாட்களில் பவர்டிரெய்ன் என்ஜின்களின் தயாரிப்பு துவங்கிவிடும். முதல் கட்டமாக வருடத்திற்கு 16,000 யூனிட்கள் தயாரிக்கப்படும். பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 5, 2010, 12:58 [IST]
English summary
Car market General Motors is busy shaping six more models for the next two years. This, the company projects, will enhance the sale volume in addition to the available ones like Aveo \-UVA, Optra, Cruze, Spark, Beat, Aveo sedan, Tavera SUV. The company’s VP for sales and marketing said that the company is optimistic over the growth rate of the Indian car market. He said the platform for all sort of cars – compact to luxury- has been excellent and GM believes that the increase of its products will be the only way to take hold the market. The new products will be on the lines of Tata’s alliance with SAIC or Maruti’s Elco.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+