ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிகர மதிப்பு 50 சதவிகிதம் குறைந்தது!

சிகே பிர்லா குழுமத்தின் நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். நாட்டின் பழமையான கார் தயாரிப்பு நிறுவனம் இது.
அம்பாஸிடர் கார் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆனால் நாட்டில் பெருகிவிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸால் போட்டிபோட முடியவில்லை.
இதன் விளைவு நிறுவனத்தின் நிகர மதிப்பு படிப்படியாகக் குறைந்துவிட்டதாம். திங்களன்று இந்த நிறுவனம் தனது நிகர மதிப்பு 50 சதவிகிதம் குறைந்துவிட்டதாக தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்திடம் (BIFR) அறிக்கை அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இன்றைய மதிப்பு ரூ 164 கோடி. இதன் 'கூடிய நிகர நஷ்டம்' மட்டும் ரூ.132 கோடி.
ஆனால் இந்த நிலையிலிருந்து நிறுவனம் மீண்டு விடும் என்றும், அம்பாஸடர் மற்றும் புதிய தயாரிப்பான வின்னர் போன்ற கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு இருப்பதால் நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏதுமில்லை என்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் செயல் துணைத் தலைவர் மோலாய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








