தமிழகத்தில் கார்களுக்கு ஆயுட் கால வரி உயர்வு

By

சென்னை: தமிழகத்தில் கார்களுக்கு ஆயுட் கால வரி உயர்த்தப்படுகிறது.

சட்டசபையில் இன்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு வாகனங்கள் மீதான வரி விதிப்பு திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை உள்பட 9 மாநகரங்களில் தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி, மாசு, விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அமைப்பு டெல்லியில் நடத்திய கூட்டத்தின் போது பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதன் அடிப்படையில் பொது போக்குவரத்து நோக்கம் இல்லாத வாகனங்களை பொறுத்தவரை ரூ. 10 லட்சத்துக்கு மேற்படாத விலையுள்ள கார்களுக்கு ஆயுட்கால வரி 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள கார்களுக்கு அதன் மதிப்பில் 15 சதவீதத்துக்கு வரியை உயர்த்தவும், பழைய கார்களுக்கு ஆயுட் கால வரியை அதிகரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

More from DriveSpark

Article Published On: Monday, May 10, 2010, 18:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+