ரேவா மின்சார கார் நிறுவனத்தை வாங்கிய மகிந்திரா

By
REVA Electric Car
டெல்லி: மின்சார கார்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா வாங்கியுள்ளது.

இதையடுத்து ரேவா நிறுவனத்தின் பெயர் 'மகிந்திரா ரேவா எலக்ட்ரிக் வெஹிக்கிள் கம்பெனி' என மாற்றப்படுகிறது.

ரேவா நிறுவனத்தின் 55.20 சதவீத பங்குகள் மகிந்திரா நிறுவனத்திடம் வந்துள்ளது. இதற்காக மகிந்திரா ரூ.450 கோடி தந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதையடுத்து ரேவா நிறுவனம் மகிந்திரா நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது. ஆனாலும் ரேவா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சேத்தன் மைனி தொடர்ந்து அதே பதவியில் என்று தெரிகிறது.

ரேவா நிறுவனத்தை மைனி குழுமம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.இ.வி-எல்.எல்.சி. ஆகியவை இணைந்து உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்ககது.

கூட்டு நிறுவனமான இதில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் பங்கெடுக்க ஒப்பந்தம் செய்து கொண்த்துள்ளது. இதன்மூலம் ஸ்பார்க்' என்ற பெயரில் மின்சார கார்களை தயாரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் திட்டமிட்டுள்ளது.

ரேவாவை மகிந்திரா நிறுவனம் வாங்கியதையடுத்து மும்பை பங்குச் சந்தையில், மகிந்திரா நிறுவன பங்குகளின் விலை 0.64 சதவீதம் அதிகரித்து ரூ.519 ஆக உயர்ந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 27, 2010, 11:42 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+