எடியோஸ்... டொயோட்டாவின் குறைந்த விலை கார்!

இந்த நிறுவனம் தயாரிக்கும் சிறிய ரகக் காரான எடியோஸ் பெட்ரோல் மாடல் கார் 780 சதவீதம் இந்திய உதிரி பாக தயாரிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுகிறது. இதனால் காரின் விலையும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
2011ல் இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. இதன் பிறகு இதே பிரிவில் டீஸல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காரையும் அறிமுகப்படுத்துகிறது டொயோட்டா. ஆனால் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே இந்த மாடல் அறிமுகமாக உள்ளது.
இத்தகவல்களை ஹைதராபாதில் 'டொயோட்டா யு ட்ரஸ்ட்' மையத்தைத் திறந்து வைத்த பின்ன, நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் சந்தீப் சிங் தெரி்வித்தார். இதுபோன்ற மையங்கள் தற்போது நாட்டில் 5 இடங்களில் உள்ளதாகவும், விரைவில் இதன் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மாருதி நிறுவனம் திறந்துள்ள 'மாருதி ட்ரூ வேல்யூ' மையங்களைப் போன்றவைதான் இந்த டொயோட்டா மையங்களும். இங்கு வாடிக்கையாளர் தங்கள் பழைய கார்களை நல்ல விலைக்கு விற்க முடியும். புதிய கார்களை வாங்கவும் உதவுகிறார்கள்.
இந்திய கார் சந்தையில் தற்போது டொயோட்டாவின் பங்கு 3 சதவீதம். எடியோஸ் கார் விற்பனைக்கு வந்தால் இது 6 சதவீதமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எடியோஸ் கார்கள் இந்திய சாலைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் 22 முக்கிய நகரங்களில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எடியோஸ்.


Click it and Unblock the Notifications








