இந்தியாவில் ரூ.85 லட்சத்துக்கு 'ஜாகுவார்' விற்கும் டாடா!

இங்கிலாந்தின் லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் வாங்கிய பிறகு உலகளவில் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
இப்போது ஜாகுவார் XJ ரக கார்களின் விற்பனையை இந்தியாவில் தொடங்கி உள்ளது டாடா. இந்தக் காரை வாங்க மக்கள் காட்டிய ஆவலால்தான் தற்போது இந்தியாவில் விற்பனையை தொடங்கி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த ஜாகுவார் 5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. சொகுசு கார் பிரிவில் குறைவான எடை கொண்ட கார் இது. விலை ரூ 85 லட்சம்!


Click it and Unblock the Notifications








