பெட்ரோல் விலை உயர்வு: கார் விற்பனையை பாதிக்குமா?

By
hyundai Sales Growth
மும்பை: பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் டீசல் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் அதன் விலை ரூ. 3.75 உயர்ந்துள்ளது. அதே சமயம் டீசல் விலையை ரூ. 2 மட்டும் உயர்த்தியுள்ளது.

கடந்த காலங்களில் பெட்ரோல், டீசலுக்கு இடையில் இருந்த அதிக விலை இடைவெளி காரணமாக டீசல் கார்களின் விற்பனை அதிகரித்தது. கடந்த 10 ஆண்டுகளில் டீசல் கார்களின் விற்பனை கிட்டதட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு இடையில் உள்ள விலை இடைவெளி மேலும் அதிகரித்தால், டீசல் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதனால் பெட்ரோல் கார்கள் விற்பனை சரிந்தாலும் டீசல் கார்கள் விற்பனை மூலம் சரிவை கார் நிறுவனங்கள் சமாளித்துவிட முடியும்.

விஎன்னதான் எரிபொருள் விலை ஏறினாலும் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆட்டோ தொழில் வளர்ச்சியடைந்துவிட்டது. இதனால் மோட்டார் வாகன விற்பனை எதனாலும் கடுமையாக பாதிக்கப்படாது என்பது ஆட்டோ நிபுணர்களின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 29, 2010, 17:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+