இந்தியாவின் நம்பர் 1 சொகுசு கார்-குறி வைக்கும் ஆடி

இந்தியாவின் நம்பர் ஒன் மலிவு விலைக் காராக டாடாவின் நானோ உருவெடுத்து வரும் நிலையில், தற்போது சொகுசுக் கார் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க ஜெர்மனியின் ஆடி திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் ஆடிதான் நம்பர் ஒன் சொகுசுக் காராக உள்ளது. அதே இடத்தை இந்தியாவிலும் பிடிக்க அது திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆடி இந்தியாவின் தலைவர் மிக்கேல் பெர்ஸ்க் கூறுகையில், இந்தியாவில் நாங்கள்தான் நம்பர் ஒன் என்ற இடத்தைப் பிடிக்க விரும்புகிறோம்.
நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 1400 கார்களை விற்று 71 சதவீத வளர்ச்சியை நாங்கள் அடைந்துள்ளோம் என்றார்.
கொல்கத்தாவில் ஆடி இந்தியா தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. அந்த விழாவில் பேசுகையில்தான் பெர்ஸ்க் இவ்வாறு கூறினார்.
கடந்த ஏப்ரல் -ஜூன் மாத காலாண்டில் 622 கார்களை ஆடி இந்தியா விற்றுள்ளது. இது 42 சதவீத வளர்ச்சியாகுமாம். ஜூன் மாதத்தில் 233 கார்களை விற்றுள்ளது.
தங்களது எதிர்பார்ப்புக்கேற்பட இந்தியாவில் விற்பனை இருப்பதாகவும், முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பெர்ஸ்க் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








