ஆடியின் புதிய கார் ஏ8: இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம்

மேலும், தனது டிலர்ஷிப்பையும் 18 ஆக உயர்த்தவுள்ளது(தற்போது 10 டீலர்ஷிப் உள்ளது). இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏ8 மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது 15,000 முதல் 20,000 கார்கள் விற்றதன் மூலம் ஆடிக்கு கார் சந்தையில் 24 சதவிகிதம் பங்கு உள்ளது.
இது குறித்து ஆடி இந்தியாவின் தலைவர் மைக்கேல் பெர்ஷ்கி கூறியதாவது,
ஆடி சந்தையில் உள்ள பங்குகளை அதிகரிக்கவும், லாபத்தைக் கூட்டவும் எண்ணுகிறது. வரும் 2011-ம் ஆண்டு இந்தியச் சந்தையில் 30 சதவிகிதத்தைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவ்டி 250 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 171 கார்கள் தான் விற்கப்பட்டன. இதன் மூலம் 46 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது.
புபனேஸ்வர், பாட்னா உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் விநியோகத்தை அதிகரிக்க உள்ளது. அடுத்த ஆண்டில் 45 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. சூரத், லக்னோ, லூதியானா, இன்டோர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய ஷோரூம்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications