ஆடி காரின் ஆகஸ்ட் விற்பனை 46 சதவீதம் உயர்வு

இதுகுறித்து ஆடி இந்தியாவிந் தலைவர் மிக்கேல் பிரெஸக் கூறுகையில், கடந்த ஆண்டு விற்பனையை இந்த ஆண்டு முறியடித்துள்ளோம். தொடர்ந்து இந்த முன்னேற்றம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 1876 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இது 66 சதவீதம் கூடுதலாகும். இந்தியாவில் டீலர்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரித்து வருகிறோம். கொல்கத்தா, பெங்களூரில் ஷோரூம்களை திறக்கவுள்ளோம் என்றார்.
ஆடிக்கு இந்தியாவில் கடும் போட்டியாக இருப்பது பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள்தான். ஆடியிலிருந்து ஏ4, ஏ6, ஏ8, க்யூ5, க்யூ7, டிடி, ஆர்8 ஆகிய ரக கார்கள் வெளியாகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








