இன்டிகோ, இன்டிகா விலையை உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்

அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. விலை உயர்வு கணிசமானதாக இருக்கும் என்று தெரிகிறது.
உற்பத்திச் செலவுகள், குறிப்பாக டயர் விலை உயர்வு பெருமளவில் இருப்பதால், நிலைமையை சமாளிக்க இன்டிகா, இன்டிகோ கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாம் டாடா மோட்டார்ஸ்.
இருப்பினும் இந்த விலை உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை டாடா மோட்டார்ஸ்.
சமீபத்தில்தான் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கான விலையை உயர்த்தியது நினைவிருக்கலாம்.
தனது அனைத்து மாடல்களுக்கும் 1.2 சதவீத விலை உயர்வை செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது ஹூண்டாய்.


Click it and Unblock the Notifications