மைக்ரா டீசல் கார்களுக்கான முன்பதிவு துவங்கியது: டிசம்பர் 24ல் அறிமுகம்

பொருளாதார சரிவு சீராகிவருவது ஜப்பான் கார் ஜாம்பவானான நிஸான் மோட்டார்ஸின் இந்தியப் பிரிவுக்கு நல்ல காலமாக அமைந்துள்ளது. அன்மையில் மைக்ரா அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமாகவிருக்கும் மைக்ரா டீசல் கார்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த கார் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள 20 டீலர்கள் ஏற்கனவே முன்பதிவை துவங்கிவிட்டனர்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது,
நிஸான் பெட்ரோல் கார்களின் வெற்றி கம்பெனிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது.
பெட்ரோல் கார் அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதத்திலேயே டீசல் காரை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. டீசல் காரும் கம்பெனிக்கு நல்ல பெயரை ஈட்டித் தரும் என்று நம்புகிறோம்.
சென்னைக்கு அருகில் உள்ள நிஸான் தொழிற்சாலையில் மைக்ரா பெட்ரோல் கார் தயாரிக்கப்படுகிறது. ஹாட்ச்பேக் மைக்ரா கடந்த ஜூலை மாதம் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் 4500 கார்கள் விற்பயனையாகிவிட்டன என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








