போர்டு கார் தயாரிப்பில் ரோபோட்டுகள்!

Ford Figo Demand
கார்த் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போர்டு நிறுவன் தனது சென்னை ஆலையில் கார் தயாரிப்பில் ரோபோட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

சென்னையில் 92 ரோபோட்டுகளை போர்ட் நிறுவனம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 30 சதவீத வேலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்களுக்கு பெயின்ட் அடிப்பது, வெல்டிங், கீழ் உள்ள பகுதிகளை இணைப்பது, கார் கதவுகளை சரி செய்வது போன்ற பணிகள் ரோபோட்டுகளிடம் தரப்படுகின்றன.

போர்டு நிறுவனத்தின் பிகோ கார்கள் தயாரிப்பில்தான் தற்போது ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தனது சென்னை ஆலையின் உற்பத்தி அளவை 2 லட்சம் கார்களாக உயர்த்துவதற்காக போர்டு நிறுவனம் ஏற்கனவே 50 கோடி டாலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளது போர்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்குத் தயாராகி விட்ட போர்டு பிகோ கார்கள் விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதற்கிடையே போர்டு நிறுவனம் விரைவில் தனது கார் விலைகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாம். அதேபோல ஜிஎம், டொயோட்டோ கார்களின் விலையும் கூட உயரப் போகிறதாம்.

இந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விலைகளை உயர்த்துவது இது நான்காவது முறையாகும். விற்பனை அதிகரித்திருப்பதால் இந்த விலை உயர்வுக்கு இவை திட்டமிட்டுள்ளன.

டெல்லி நிலவரப்படி 0.5 சதவீதம்முதல் 3 சதவீதம் வரை விலை உயர்வு இருக்குமாம். அதாவது ரூ. 1500 முதல் ரூ. 20 ஆயிரம் வரை விலை உயர்வு இருக்கும்.

டொயோட்டோ இன்னோவா காரின் விலை ரூ. 10,000 வரை உயரலாம். கொரோல்லா ஆல்டிஸ் செடன் கார் விலை ரூ. 15,000 வரை உயரலாம். அடுத்த வாரமே இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 12, 2010, 16:25 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+