வோல்வோ வழங்கும் புதிய எஸ்.யு.வி.

வோல்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் வோல்வோ எக்ஸ்சி 60 என்ற புதிய வகை எஸ்.யூ.வியை களம் இறக்குகிறது. நவம்பரில் இந்தப் புதிய கார் களத்திற்கு வருகிறது.
இந்தியாவின் எஸ்யுவி சொகுசுக் கார் வரிசையில் இதன் மூலம் வோல்வோவும் இணைகிறது. ஸ்போர்ட்ஸ் கார் போன்ற பொலிவு, பாதுகாப்பு மற்றும் சொகுசு ஆகியவை இணைந்து மிரட்டல் காராக இது விளங்கும் என வோல்வோ எதிர்பார்க்கிறது.
இந்தப் புதிய காரின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு வோல்வோ நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பங்களைக் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கும் என்று வோல்வோ நிறுவன நிர்வாக இயக்குநர் கூறியிருப்பதால் விலை சற்று அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் இந்தியச் சந்தையில் தனது கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வோல்வோ இறங்கியுள்ளது.
புதிய வோல்வோ காரில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனராம்.
தற்போது இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் வோல்வோ எஸ்80 (சொகுசு செடன்)யுடன் புதிய எக்ஸ்சி 90 கார் இணைகிறது.
டெல்லி, சண்டிகர், கொச்சி, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் வோல்வோவுக்கு டீலர்கள் உள்ளனர். விரைவில் கோவை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் டீலர்களை நியமிக்கவுள்ளது வோல்வோ.


Click it and Unblock the Notifications








