ஹுன்டாயை முந்தியது டாடா மோட்டார்ஸ்

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, டாடா மோட்டார்ஸின் விற்பனை 49 சதவீதம் அதிகரித்து 83,739 யூனிட்கள் விற்றுள்ளது. ஆனால், ஹுன்டாய் நிறுவனத்தின் விற்பனை 21 சதவீதமாக இருந்து 83,018 யூனிட்கள் விற்றுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையேயான வித்தியாசம் 721 கார்கள். கடந்த 2009-2010-ம் ஆண்டுகளில் ஹுன்டாய் 3.14 லட்சம் கார்களும், டாடா 2.85 லட்சம் கார்களும் விற்றுள்ளன.
டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொடங்கி, முழு வீச்சில் நடைபெறுகின்ற நிலையில் டாடா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கும் என நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். டாடாவின் ஹாட்ச் பேக் கார்களான இன்டிகா விஸ்டா, இன்டிகோ மான்ஜா கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்தில் 3,550 நானோ கார்களும், ஜூன் மாதத்தில் 7, 704 கார்களும்
விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்கும்.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் கார்கள் தயாரிப்பில் மட்டுமின்றி கமர்சியல் வாகனங்கள் தயாரிப்பிலும் முன்னோடியாக உள்ளது. 2009-2010-ம் ஆண்டுகளில் 3.22 லட்சம் கமர்சியல் வாகனங்கள் விற்றுள்ளன. ஜாக்குவார் மற்றும் லாண்ட் ரோவரை வாங்கிய பிறகு ஆட்டோ வர்த்தகத்தில் டாடாவின் கை படாத பிரிவே இல்லை. 2009-2010-ம் ஆண்டுகளில் டாடாவின் ஒட்டு மொத்த வாகன விற்பனை 31 சதவிகிதம் அதிகரித்து 6.08 லட்சம் யூனிட்கள் விற்றுள்ளது.
ஹுன்டாய் நிறுவனத்தின் ஆய்வு பிரிவு ரூ. 2 முதல் 3 லட்சம் பிரிவில் புதிதாக ஒரு சான்ட்ரோ காரை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. ஹுன்டாய் ஐ 10, சான்ட்ரோ கார்கள் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக தயாரிக்கப்படும் சிறிய கார் அறிமுகமாகும் வரை ஹுன்டாயின் விறிபனையில் பெரிய மாற்றம் ஒன்றும் இராது.


Click it and Unblock the Notifications








