5 ஆண்டுகளில் 8 மாடல்களை அறிமுகப்படுத்தும் போர்டு இந்தியா: 25 வாரங்களில் 30,000 பிகோ கார்கள் விற்பனை

கம்பெனி சிறிய கார் பிரிவில் கண்டிப்பாய் இருக்கும் என்று கம்பெனியின் தலைவர் மைக்கேல் போனிஹம் கூறினார். ஆனால் ரூ. 3 லட்சம் பிரிவில் உள்ள கார்களா என்பது பற்றி அவர் உறுதிபடுத்தவில்லை.
போர்டு என்டவர் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 4x2 ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் காரை போர்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 2.5 லிட்டர் டீசல் மேனுவல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் 4x4 ஆட்டமேடிக் மாடல்களுடன் கிடைக்கிறது. போர்டு என்டவர் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 4x2 ஆட்டமேடிக் டிரான்ஸ்மிஷன் காரை அறிமுகப்படுத்திய பிறகு தான் மைக்கேல் பேசினார். இந்த காரின் விலை ரூ. 17.73 லட்சம்.
இந்தியாவிற்கு வந்த பிறகு போர்டு நிறுவனம் விரிவாக்கத்திற்காக ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டாலர் செலவில் ஆண்டிற்கு 200,000 கார்கள் தயாரிக்க சென்னையில் வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்தது.
பிகோ கார் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இந்தியாவில் முதல் 25 வாரங்களில் 30,000 பிகோ கார்கள் விற்றுள்ளது. கம்பெனி இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று மைக்கேலே தெரிவித்தார்.
ரூ. 15 முதல் 20 லட்சம் பிரிவில் போர்டு இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அது எதிர்பார்க்கிறது.
வளர்ச்சித் திட்டங்களைப் பொருத்தவரை போர்டு இந்தியா தென் ஆப்பிரிக்கா உள்பட 50 சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. பிகோ தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்ற 10 கார்களில் ஒன்று. இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
என்ஜினியர்களையும், டெக்னிஷியன்ஸ்களையும் பணியில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








