எலெக்ட்ரிக் இன்டிகா அறிமுகம்!

மின்சாரத்தில் இயங்கும் கார்கள் மற்றும் ட்ரக்குகள் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் இவை இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு வராது. பிரிட்டன், உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இவை முதலில் விற்பனைக்கு விடப்படும்.
மாற்று எரிபொருள் உள்கட்டமைப்பு மானியத் திட்டத்தின் கீழ் பிரிட்டிஷ் அரசு மின்சார கார்கள், ட்ரக்குகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்கப்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் டாடா இன்டிகா விஸ்டா கார்கள் மற்றும் டாடா ஏஸ் மினி ட்ரக்குகள் தயாரிக்கு 10 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் கடன் தந்துள்ளது பிரிட்டன் அரசு. எனவே இந்த வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கிறது ஐரோப்பாவில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம். இந்தத் திட்டத்துக்காக டாடா தன் பங்குக்கு 25 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது.
சரியான உள்கட்டமைப்பு, சார்ஜிங் ஸ்டேஷன்ஸ் போன்ற வசதிகள் இல்லாததால் இப்போதைக்கு இந்தியாவில் இந்த வாகனங்களை உற்பத்தி செய்யும் திட்டம் இல்லையாம்.
பியட் ரகக் கார் விற்பனையை விஸ்தரிக்கும் டாடா!
இதற்கிடையே, இத்தாலிய கார் நிறுவனமான பியட்டின் தயாரிப்புகளை இந்தியாவில் அதிகம் விற்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸும், பிட் நிறுவனமும் இந்தியாவில் கூட்டு நிறுவனமாக செயல்படுகின்றன. பியட்டின் கார்கள் மற்றும் ட்ரக்குகளை மார்க்கெட்டிங் செய்யும் உரிமை டாடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது ட்ரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளதால், பியட் நிறுவனத்தின் கார்கள் விற்பனையுடன், ட்ரக்குகள் விற்பனையையும் அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் சிஇஓ ஃபோர்ஸ்டர் தெரித்துள்ளார்.
டெல்கோ தொழிலாளர்களுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்
சம்பள சீரமைப்பு தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்துக்கும் டெல்கோ தொழிலாளர் யூனியனுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏப்ரல் 1, 2010 முதல் மார்ச் 31, 2013 வரை இந்தப் புதிய ஒப்பந்தம் செயல்பாட்டில் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தால் டெல்கோ யூனியனின் 10000 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என அந்த யூனியன் செயலர் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








